×

ஆப்கானிஸ்தானில் தொடர் பதற்றம்; காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை: வீரர் ஒருவர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்து விட்டதால், அங்கு வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள்  உயிருக்கு பயந்து, வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்து வருகின்றனர். சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வழிகளையும் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். காபூல் விமான நிலையம் மட்டுமே அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கிருந்து விமானம் மூலம் தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க, காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்கள் மீதும் தலிபான்கள் கடந்த 19ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நேற்றும் விமான நிலையத்திற்குள் நுழைய மக்கள் முண்டியடித்தபோது, அவர்களை கலைப்பதற்காக வானத்தை நோக்கி தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு பயந்து மக்கள் தப்பிக்க முயன்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். நிம்மதியான வாழ்க்கையை தேடி வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயலும் போதும், தலிபான்களால் ஏற்படும் பீதியில் அப்பாவி மக்கள் உயிர் பறிக்கப்படுவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. ஜெர்மனி, அமெரிக்க படைகளும் இணைந்து நடத்தியா துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். …

The post ஆப்கானிஸ்தானில் தொடர் பதற்றம்; காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை: வீரர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul airport ,Kabool ,Kabool Airport, Afghanistan ,Taliban ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு