×

வாகனம் மோதி பலியான குட்டியின் சடலத்துடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு: தர்மபுரி அருகே பாசப்போராட்டம்

தர்மபுரி: தர்மபுரி அருகே முத்தம்பட்டியில் வாகனம் மோதி உயிரிழந்த குட்டியின் உடலை தூக்கிக்கொண்டு தாய் குரங்கு சுற்றித்திரிவது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பொம்மிடி- முத்தம்பட்டி வனச்சாலையில், பிரசித்தி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த சாலையில், தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மரங்கள் அதிகமாக உள்ளதால், குரங்குகள் கூட்டமாக வசிக்கின்றன. ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த குரங்குகளுக்கு பழங்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் கோயிலில் பூஜை ரத்து செய்ததால், பக்தர்களின் வருகையும் குறைந்தது. ஆனால், பொதுமக்கள் கொடுக்கும் உணவின் ருசிக்கு அடிமையான குரங்குகள், மீண்டும் காட்டிற்குள் செல்லாமல் சாலையோரம் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் பயணிகள் கொடுக்கும் உணவிற்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், அந்த வழியாக மின்னல் வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டுமெனவும், குரங்குகளுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டுமெனவும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டி குரங்கு ஒன்று, வாகனத்தில் சிக்கி பலியானது. ஆனால், அந்த குட்டி இறந்தது கூட தெரியாமல், அதன் தாய் அதனை நெஞ்சோடு அணைத்தபடி சுற்றித்திரிகிறது. இது காண்பவர்களின் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்….

The post வாகனம் மோதி பலியான குட்டியின் சடலத்துடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு: தர்மபுரி அருகே பாசப்போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pasaporatam ,Darmapura ,Darmapuri ,Muthampatti ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...