×

நீட் தேர்வு ரத்து விவகாரம் தமிழக அரசு சாதிக்கும்: திருமாவளவன் நம்பிக்கை

திருச்சி: நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக அரசு சாதிக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நீதிக்கான அரசு. பெரியார் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது இந்திய வரலாற்றில் மாபெரும் சமூக புரட்சி. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. இந்துக்கள் ஒற்றுமை பேசும் சிலர், சமத்துவத்தை ஏற்க மறுக்கின்றனர். கோயில் அர்ச்சகராக இந்துக்கள் அல்லாதவர்கள் இங்கே நியமிக்கப்படவில்லை. சமூக நீதிக்கான இந்த முயற்சியில் தமிழக அரசுக்கு விசிக துணையாக இருக்கும். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயமாக இதில் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்….

The post நீட் தேர்வு ரத்து விவகாரம் தமிழக அரசு சாதிக்கும்: திருமாவளவன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Thirumavalavan ,tamil nadu government ,Vizika Leader ,TN ,Thirumavalavan Faith ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்