×

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் தொண்டைமான் குளம் உள்ளது. இதன் அருகில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குளத்தில் அவ்வப்போது மலைப்பாம்பு பிடிபடுவது வழக்கம். இதுவரை 10 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீனுக்காக போடப்பட்ட வலையில் பெரிய மலைப்பாம்பு சிக்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,“ அடிக்கடி குளத்தில் மலைப்பாம்பு பிடிபடுவது குறித்து பஞ்சாயத்திற்கும். வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், இந்த குளத்திற்கு எப்படி மலைப்பாம்பு வருகிறது என்று தெரியவில்லை. அவ்வவ்போது பெரிய அளவில் மலைப்பாம்புகள் பிடிபடுவதால் குழந்தைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளை வெளியே விட அச்சமாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடு க்க வேண்டும்’’ என்றனர்….

The post மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Thondaiman pond ,Mugavoor ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் கம்மாபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு