×

ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக்கொலை: காஷ்மீரில் தொடர் பதற்றம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் உயிரிழந்தார். அங்கு பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நிலவும் துப்பாக்கி சண்டையால் பதற்றம் நீடிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ‘அப்னி பார்ட்டி’ கட்சியின் நிர்வாகியான குலாம் ஹசனை தீவிரவாதிகள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தார். குல்காம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் அரசியல் கட்சியினர் மீது 3 முறை தாக்குதல் நடந்துள்ளது. இதனிடையே ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவந்திரபுரா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் தீவிரவாதிகள் தாக்குதல், துப்பாக்கி சண்டை என காஷ்மீரில் பதற்றம் நீடித்து வருகிறது. …

The post ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக்கொலை: காஷ்மீரில் தொடர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Kashmir, Kashmir ,Rajori district ,Srinagar ,Kashmir ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை: பரூக்