×

பெகாசஸ் குறித்து விசாரிக்க சிறப்பு குழு ஒன்றிய, மே.வங்க அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பெகாசஸ் உளவு செயலி மூலம் ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், நீதிபதிகள் உட்பட 300 இந்தியர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக, பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் நாட்டிலேயே முதல் முறையாக, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர் மற்றும் கொல்கத்தா உயர்  நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை நியமித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு குறித்து பதிலளிக்க ஒன்றிய மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். …

The post பெகாசஸ் குறித்து விசாரிக்க சிறப்பு குழு ஒன்றிய, மே.வங்க அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pegasus ,Union ,Bengal government ,Supreme Court ,New Delhi ,Indians ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...