×

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லார்ட்சில் இருந்து மாற்றம்

கொல்கத்தா: கொரோனா 2வது அலை காரணமாக லார்ட்ஸ் அரங்கில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டி ஜூன் 18ம் தேதி லண்டன் லார்ட்ஸ் அரங்கில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, லார்ட்ஸ்  அரங்கில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி சவுத்தாப்டன் நகருக்கு மாற்றப்படுகிறது. இதனை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். ஐசிசி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனிமை கட்டாயம்: ஐபிஎல் தொடர் மே 30ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு இந்திய அணி உடனடியாக இங்கிலாந்து புறப்படும். போட்டிக்கு முன்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்பதால், ஆஸ்திரேலியாவை போல் இங்கிலாந்திலும்  வீரர்கள் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். கங்குலி ரெடி: ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு பிறகு பிசிசிஐ நடவடிக்கைகளில் இருந்து அதன் தலைவர் சவுரவ் கங்குலி ஒதுங்கியிருந்தார்.  இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் அலுவலக பணிகளை தொடங்கியுள்ள கங்குலி, ‘முழு உடல்தகுதியுடன் நலமாக இருக்கிறேன்’ என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்….

The post டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லார்ட்சில் இருந்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Test Championship ,Lord's ,Kolkata ,2nd wave ,Corona ,ICC Test Championship Final ,Lord's Arena ,Test Championship Final ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்: மழையால் குறிஞ்சி ஆண்டவர்...