×

மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கண்காணிப்பாளருக்கு 8 ஆண்டு சிறை: நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த சென்னை முகப்பேரை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் விஜயகுமார்(53) என்பவரிடம் மினிபஸ் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்ப மனு கொடுத்திருந்தார். அப்போது விஜயகுமார் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அவர் இதுகுறித்து காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்க முயன்றபோது விஜயகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் அரசு வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் விஜயகுமார் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக அவருக்கு 4 வருடம் கடுங்காவல் தண்டனையும், லஞ்சத்தை பெற்றதற்காக 4 வருடம் கடுங்காவல் தண்டனையும், இரண்டு குற்றத்திற்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் என ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்….

The post மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கண்காணிப்பாளருக்கு 8 ஆண்டு சிறை: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thulasiraman ,Redtipalayam ,Pallipatu ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...