×

மாநகராட்சி பள்ளிக்கு 2 லட்சத்தில் சீர்வரிசை

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு, மாணவர்களின் பெற்றோர் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை அளிக்கப்பட்டது. மணலி புதுநகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, இப்பள்ளிக்கு நேற்று முன்தினம் மாலை அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இருதயமேரி தலைமை வகித்தார். சேவா பாலம் தொண்டு நிறுவன தலைவர் இருளப்பன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, பெற்றோர்கள் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான பீரோ, மேஜை, மின்விசிறி போன்ற பல்வேறு சீர்வரிசை பொருட்களை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். பின்னர் டிவிஎம் சேவா பாலம் சார்பில், முன்களப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மாநகராட்சி பள்ளிக்கு 2 லட்சத்தில் சீர்வரிசை appeared first on Dinakaran.

Tags : School ,Manali Budu Nagar ,Manali ,
× RELATED தக்கலை மணலி ஜங்சனில் தூர் வாரப்படாத கழிவு நீர் ஓடை: பொதுமக்கள் வேதனை