×

நடிகர் கமல் ஆலந்தூரில் போட்டியிட முடிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக என இரு அணிகள் மோதுகின்றன. அதைத் தவிர நடிகர் கமல், இயக்குநர் சீமான், டிடிவி தினகரன் ஆகியோரும் தனித்தனியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளனர். அதில்  சீமான் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அவர் திருவொற்றியூரில் போட்டியிடுகிறார். அமமுகவில் டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி  ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தவர்களிடம் கமல் நேர்காணல் நடத்தினார். இதற்கிடையில், நடிகர் கமல் ஆலந்தூரில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.அவர் மயிலாப்பூர் அல்லது ஆலந்தூரில் போட்டியிடலாம் என்று திட்டமிட்டாராம். இரு தொகுதிகளிலும் கணிசமான அளவில் பிராமண சமூக ஓட்டுகள் உள்ளன. இந்த ஓட்டுக்களை கைப்பற்றினாலே கணிசமான ஓட்டுக்களைப் பெறலாம் என்று  முடிவு செய்தாராம். அதில் மயிலாப்பூரில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் அங்கு பாஜ சார்பில் ஒரு அதே சமூகத்தை சேர்ந்தவர் நிறுத்தப்பட உள்ளாதாக தகவல்கள் வெளியானது. இதனால், ஆலந்தூரில் அதிமுகதான் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆலந்தூர் தொகுதி தனக்கு சாதகமாக  இருக்கும் என்று அவர் கருதுகிறாராம். இதனால்தான் ஆலந்தூரில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். அதிமுகவைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிடுகிறாராம். திமுகவில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன்  மீண்டும் சீட் கேட்டுள்ளார். அவர் தொகுதியை நன்றாக வைத்துள்ளார். …

The post நடிகர் கமல் ஆலந்தூரில் போட்டியிட முடிவு appeared first on Dinakaran.

Tags : Kamal ,Alandur ,Chennai ,Tamil Nadu Legislative elections ,Dazhagam ,Adimuga ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்