×

கோவையில் நடந்த மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டி வெற்றி பெற்ற ஒரத்தநாடு இளைஞருக்கு மக்கள் வரவேற்பு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு தெற்கு கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அன்புகுமார் இவரது மகன் அரவிந்த் (22 )டிப்ளமோ சிவில் இன்ஜினியர். இவர் சிறுவயது முதல் ஆணழகன் போட்டியில் பங்குபெற வேண்டும் என மிகுந்த ஆர்வமாக இருந்ததால் கடுமையான பயிற்சி பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை அன்புகுமார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள சிரமப் பட்டுக் கொண்டிருந்த அரவிந்தருக்கு அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அவருக்கு பண உதவி செய்து ஆக. 15ம்தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கலந்துகொண்ட 70 கிலோ பிரிவில் முதல் 10 இடத்தில் ஏழாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்று ஊர் திரும்பிய அரவிந்துக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்….

The post கோவையில் நடந்த மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டி வெற்றி பெற்ற ஒரத்தநாடு இளைஞருக்கு மக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Oratha Nadu ,Mr. India Male Contest ,Coimbatore ,Orathanadu ,Anbakumar ,Ambalapattu South Geezakottai ,Tanjore district ,Arvind ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்