×

செய்யூர் அருகே பரபரப்பு கடற்கரை மணலில் 2 கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டுக்கு கடத்த முயற்சியா?

செய்யூர்: செய்யூர் அருகே கடற்கரை மணலில் புதைந்த நிலையில், 2 கற்சிலைகள் மீட்கப்பட்டன. இவற்றை யாராவது வெளிநாட்டுக்கு கடத்த முயன்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். செய்யூர் அருகே பனையூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 2 கற்சிலைகள் அலையில் அடித்து வரப்பட்டு, மணலில் புதைந்த நிலையில் காணப்பட்டன. இதில், சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒன்றரை அடி உயர அம்மன் சிலையும், பைரவர் முகம் பொருந்திய சிலையும் மணலில் புதைந்திருந்தன. இதை பார்த்ததும் அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து செய்யூர் போலீசாருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அந்த 2 கற்சிலைகளையும் சோதனை செய்தனர். இதையடுத்து அந்த சிலைகளை மீட்டு, அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த கற்சிலைகளை யாரேனும் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல கடற்கரை மணலில் புதைத்து வைத்தனரா அல்லது கடலில் அடித்து வரப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post செய்யூர் அருகே பரபரப்பு கடற்கரை மணலில் 2 கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டுக்கு கடத்த முயற்சியா? appeared first on Dinakaran.

Tags : Seiyur ,Seyyur ,Dinakaran ,
× RELATED பவுஞ்சூர் – கூவத்தூர் இடையே செல்லும்...