×

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில் புரட்சிகர வரலாற்று சாதனை: திருமாவளவன் பாராட்டு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத பல்வேறு சாதிகளை சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை தமிழக முதல்வர் வழங்கியிருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பெரியாரின் கனவு மெய்ப்பட்டு இன்று அவரது நெஞ்சில் தைத்த முள் தமிழ்நாடு முதல்வரால் களையப் பட்டிருக்கிறது.2006ல் கலைஞர் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றபோது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டுவந்தார். அப்படி நியமனம் செய்வதற்கென அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007ம் ஆண்டு தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவியது. இப்போது மீண்டும் திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அதன் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், கலைஞரின் லட்சியத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து சாதனை படைத்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று 100வது நாளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்….

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில் புரட்சிகர வரலாற்று சாதனை: திருமாவளவன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,Archakar ,Tirumavavan ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...