×

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட் சீரமைப்பு!: மாற்று இடம் தரக்கோரி கடைகளை அடைத்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்..!!

திருநெல்வேலி: பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் உரிய மாற்று இடம் வழங்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மகாத்மா காந்தி சந்தையில் 540 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை மட்டுமே நம்பி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ள வியாபாரிகள், தங்களது வியாபாரத்தை கருத்தில் கொண்டு பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலையில் உள்ள ஜவகர் மைதானத்தில் தற்காலிகமாக கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதிகோரி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாற்று இடம் வழங்கக்கோரி தங்கள் குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாக பிரச்னை காரணமாக வியாபாரிகள் கேட்ட இடத்தை வழங்க முடியாது என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள், புதிய கடைகளை கட்டி முடிக்கும் வரை உரிய மாற்று இடம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

The post ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட் சீரமைப்பு!: மாற்று இடம் தரக்கோரி கடைகளை அடைத்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Gandhi Market ,Dharakori Shops ,Tirunelveli ,Palaiyankotta ,Dinakaran ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...