×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு சாதனைகள்: பல லட்சம் மாணவர்கள், பொதுமக்கள் பயன்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு சாதனை குறித்து தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆனதையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 31,000 அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு, 18.50 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர், மாதந்தோறும் ரூ.1000 புதுமைப் பெண் திட்டம் மூலம் 2.73 லட்சம் கல்லூரி மாணவிகள் பயன் பெறுகின்னறர், விடியல் பயணம் திட்டம் மூலம் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பயனாளிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் திட்டத்தில் 12 லட்சம் குழுக்கள் பயனடைந்துள்ளனர்.

அதைப்போன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின் இணைப்புகள் 2 லட்சம், கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடி, முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1,501 கோடி மதிப்பீட்டில் 4,812 கி.மீ. சாலைகள் மேம்பாடு, நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் பொறியியல், கலை (ம) அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்குத் திறன் பயிற்சி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 26 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றம், இதில் 28 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி திட்டத்தில் ரூ.9 லட்சத்து 61 ஆயிரம் கோடி புதிய முதலீடுகள் மூலம் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளில் 1,477 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, 30,000 இ-சேவை மையங்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 62,229 பயனாளிகளுக்கு ரூ.406.22 கோடி கடன் உதவி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 28,601 அரசுப் பள்ளி மாணவரகள் பயன்.

தமிழ்ப் புதல்வன் திட்டப்படி, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000, ரூ.5,996.53 கோடி மதிப்பிலான 6,800.68 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு, ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடியால் 13 லட்சம் பேர் பயன், கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தில் 2,38,163 நெசவாளர் குடும்பங்கள் பயன், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ரூ.590 கோடி ஒதுக்கீடு செய்து, 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 24 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மூன்றாண்டுகளில் 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1,888 கோடியில் 3,601 வகுப்பறைக் கட்டிடங்கள் திறப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்படி ரூ.1148.69 கோடியில் 2,504 கிராம ஊராட்சிகளில் 15,740 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு சாதனைகள்: பல லட்சம் மாணவர்கள், பொதுமக்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Dravida ,government ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu government ,Dravida model government ,M.K.Stalin. ,DMK government ,
× RELATED அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...