×

ஆக. 14ம் தேதி பிரிவினை பயங்கர நினைவு தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: சுதந்திரத்துக்கு பிறகு, இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானது. அப்போது, இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது ஏற்பட்ட பெரிய அளவிலான கலவரங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதை நினைவில் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 14ம் தேதி தேச பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து மோடி கூறுகையில், ‘மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14ம் தேதி தேச பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும். சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை, சமூக ஒற்றுமை மற்றும் மனித வலுவூட்டல் ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இந்த நாள் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் மோடி தனது பிரிவினை, வெறுப்புணர்வு எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் கண்டித்துள்ளது….

The post ஆக. 14ம் தேதி பிரிவினை பயங்கர நினைவு தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Pakistan ,India ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?