×

தேனி, திண்டுக்கல் உள்பட 7 பகுதிகள் முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்

சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-22ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: * நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மிளகு தனித்துவம் வாய்ந்தது. இம், மிளகினை பதப்படுத்தி சேமித்து வைக்க, பதப்படுத்தும் மையம் கொல்லி மலை காரவள்ளி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை வாரிய நிதியிலிருந்து அமைக்கப்படும். * நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், ‘ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்’ ரூ.2 கோடி செலவில் ஒன்றிய. மாநில நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.  * கடலூர், விழுப்புரம், சேலம்,  நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 28 உலர்களங்கள், ரூ.3.50 கோடியில் விற்பனை வாரிய நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.  * தமிழ்நாட்டு முருங்கை வகைகளுக்கு உள்ள ஏற்றுமதித் தேவையைக் கருத்தில் கொண்டு முருங்கை பெருமளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ’முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிக்கப்படும். முருங்கை ஏற்றுமதி மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் முருங்கை சாகுபடி பரப்பினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முருங்கையை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும். இத்திட்டம், மதுரை மாவட்டத்தில், முதல்கட்டமாக, ரூ.1 கோடியில் மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்….

The post தேனி, திண்டுக்கல் உள்பட 7 பகுதிகள் முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Honey ,Dindugul ,Murungai Export Zone ,Minister ,Bannerselvam ,Namakkal District ,Thindugul ,Dinakaran ,
× RELATED காராமணி பழப்பச்சடி