×

ஆடி மாதத்தில் மனைவியை பிரித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை: வீடியோ பதிவிட்டு உருக்கம்

சென்னை: தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்த டிரைவர் ராமன் (எ) செல்வத்துக்கும் (34), கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரேணுகாவுக்கும் (20), கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆடி மாதத்தை முன்னிட்டு ரேணுகாவை பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். மனைவியை பிரிந்து ஏக்கத்தில் இருந்த செல்வம், கடந்த வாரம் ரேணுகாவை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை வெளியில் தூங்கும்படி கூறியுள்ளனர்.இதனிடையே, சில தினங்களுக்கு முன் ரேணுகாவின் பெற்றோர் சென்னை வந்தபோது அவர்களை சந்தித்த செல்வம், மனைவியை எனது வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். என்னால் தனியாக இருக்க முடியவில்லை என கூறியுள்ளார். இதற்கு அவர்கள் மறுத்ததால், இரு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ரேணுகாவை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. இதனால், தற்கொலை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். முதலில் தூக்குப்போட்டபோது கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். 2வது முறையும் கயிறு அறுந்தது. 3வது முறை முயன்றபோது தற்கொலை நிறைவேறியது. இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.தீக்குளித்து தற்கொலை முயற்சி: அனகாபுத்தூர்  வினோபா நகரை சேர்ந்தவர் தியாகு (41). இவருக்கு லாவண்யா (28) என்ற மனைவியும், ரம்யா (12), ரித்திஷ் (6) என்ற பிள்ளைகளும் உள்ளனர். கருத்து  வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தியாகு, மனைவி மற்றும்  பிள்ளைகளை பிரிந்து சென்றார். தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த  லாவண்யா, கொரோனா காரணமாக வேலையின்றி, குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என  மனக்கவலையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, வலி தாங்க முடியாமல் அலறினார். பின்னர்  அதே பகுதியில் உள்ள தனது தங்கை சரண்யாவுக்கு போன் செய்து, தன்னை  காப்பாற்றுமாறு கூறினார். இதனால் பதறியடித்துக்கொண்டு வேகமாக வந்த சரண்யா, லாவண்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் லாவண்யா சிகிச்சை பெற்று வருகிறார்….

The post ஆடி மாதத்தில் மனைவியை பிரித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை: வீடியோ பதிவிட்டு உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Audi ,Irukkam ,Chennai ,Raman (A) Selvam ,Thandaiarpet ,Karunanidhi ,Nagar ,Renuka ,Guduvanchery ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...