×

விஜய் சேதுபதி நடிக்கும் வெப்தொடர்

சென்னை: ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி, இயக்குனர் எம்.மணிகண்டன் இணைந்துள்ள வெப்தொடர், ‘முத்து என்கிற காட்டான்’. விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் படைப்பாக உருவாகியுள்ள இத்தொடரை பி.அஜித் குமார், எம்.மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். வரும் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மூன்று வருடங்களாக புகார் எதுவும் வராததால் மூடப்படும் நிலையில் இருக்கும் கிராம காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர்பெறுகிறது. அது முத்துவின் தலை. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே என்ற தேடலில் பல மர்மங்கள் இருக்கிறது. அது எப்படி விடுபடுகிறது என்பது மீதி கதை. இதில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேக்கப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார்,

பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நட்சத்திரா நடித்துள்ளனர். எம்.மணிகண்டன், பி.அஜித் குமார், எல்.ஏ.ராஜ்குமார் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். என்.சண்முகசுந்தரம், மது நீலகண்டன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசை அமைக்க, பி.அஜித் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ஜாக்கி, சாபு மோகன் இணைந்து அரங்கம் அமைத்துள்ளனர்.

Tags : Vijay Sethupathi ,Chennai ,Kashyap ,M. Manikandan ,Vijay Sethupathi Productions ,P. Ajith Kumar ,Jio Hotstar ,Muthu ,
× RELATED நீளிரா விமர்சனம்…