×

என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் வீடு, கார்: நிஹாரிகா கொனிடேலா

ஐதராபாத்: தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர், நிஹாரிகா கொனிடேலா. தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், தமிழில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்கள் மற்றும் வெப்தொடர்களையும் தயாரித்துள்ளார். அவரது பிங்க் எலிபெண்ட் பிக்சர்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம், ‘ரகாசா’. மானஸா சர்மா இயக்கியுள்ள இதில் சங்கீத் ஷோபன், நயன் சரிகா நடித்துள்ளனர்.

இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நிஹாரிகா கொனிடெலா, ‘எங்கள் பிங்க் எலிபெண்ட் குழுவில் பணியாற்றும் அனைவருக்கும் சொந்த வீடும், காரும் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. தங்கள் குடும்பத்துடன் காரில் அவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இன்று வெளியாகும் ‘ரகாசா’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று நம்புகிறேன்’ என்று பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags : Niharika Konidela ,Hyderabad ,Nagendra Babu ,Pink Elephant Pictures ,Manasa Sharma ,Sangeet Shoban ,Nayan Sarika ,
× RELATED பிரபாஸ் அம்மாவாக நடிக்கும் ஜெயப்பிரதா