கடந்த 1967ல் காங்கிரசிடம் இருந்து தமிழகத்தின் ஆட்சி பொறுப்ைப கைப்பற்றிய பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம், தனது தேர்தலுக்கு முந்தையை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி பணியாற்றியது. அவரை அடியொற்றி கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக ஆட்சி காலங்களில் தமிழகம் முன்னேற்றப்பாதையில் தனது தடையில்லா பயணத்தை தொடர்ந்தது. தன்னிகரில்லா தமிழின தலைவரின் தலைமகன் மட்டுமல்ல, அவரது தன்னிகரில்லா தொண்டனாக அடியொற்றி நடக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாதனை பயணம் தொடர்ந்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்று 100 நாட்களில், தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவேற்றி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா கால நிவாரண நிதியாக ₹4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை பெறும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது, தனித்துறை ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயன் கிடைத்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் WAR ROOM நிறுவப்பட்டுள்ளது. பத்திரிகை, ஊடகத்துறையினரையும் முன்களப்பணியாளராக அறிவித்து அவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணியில் பலியான மருத்துவத்துறையை சேர்ந்த குடும்பங்களுக்கு ₹25 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப்பணியில் முன்களப்பணியாளர்களான செவிலிர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு டெல்டா விவசாயிகள் அதனால் பயனடைந்துள்ளனர்.தென்சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியத்துக்கு பணியாற்றியவர்களுக்கு இலக்கிய மாமணி விருது, தமிழ் எழுத்தாளர்களுக்கு இலவச வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசு பஸ்சில் இலவச பயணத்திட்டம், இயல், இசை, நாடகத்துறை கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அகதிகள் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் 13 ஆயிரம் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ₹4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள் கி.ரா, இளங்குமரனார் ஆகியோர் இறந்த பின்னர் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நடந்துள்ளது.தமிழகத்துக்கு சிறப்பு சேவையாற்றியவர்களுக்கு தகைசால் தமிழர் அரசு விருதும், அவர்களின் மறைவுக்கு அரசு மரியாதையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு ெகாண்டு வரப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 17 பேருக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.எல்லையில் வீரமரணமடைந்த 4 தமிழக ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ₹20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற 2457 அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் ஆகியோருக்கு நிவாரணத்தொகையாக ₹4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நீட் குறித்து முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.கணினி வசதியுடன் மின்நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 1220 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கோயில் சொத்துக்கள் இணையத்தளத்தில் பதிவு, கோயில்களில் தமிழில் அர்ச்சனையுடன் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.அகில இந்திய அளவில் 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு சட்டப்போராட்ட வெறறி, தமிழகத்தில் 10.5 சதவீத வன்னியருக்கு இடஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கோடியில் Defence Corridor முதலீடு, கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் படம் திறப்பு என பணிகள் தொடர்ந்து வருகிறது.தமிழ்நாட்டு வேலையில் தமிழ் இளைஞர்களுக்கு 75 சதவீத முன்னுரிமை, தமிழக பொருளாதார சிக்கலை தீர்க்க உலக பொருளாதார அறிஞர்கள் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விஷன் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தில் 20 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு என்ற திட்டத்தில் 47 திட்டங்களில் ₹28,664 கோடி முதலீடு.இதுதவிர விவசாயத்திற்கு தனிபட்ஜெட், பாடப்புத்தகத்தில் தலைவர்களின் பெயரில் சாதி பெயர் நீக்கம், ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்புதல், 120 உழவர் சந்தைகள் தொடக்கம், பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களுக்கு விலக்கு, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கல்லூரி தொடங்கும் திட்டம், தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை திட்டம் என பல்வேறு திட்டங்கள் என தனது சாதனை திட்டங்களை தொடர்ந்து வரும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது நிச்சயம் என்பது நிதர்சனம்….
The post மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 100 நாள் சாதனைகள் appeared first on Dinakaran.
