×

நிதி சுமையில் இருந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: அமைச்சர் உறுதி

சென்னை: நிதி சுமையில் இருந்தாலும், பஸ் கட்டணங்களை உயர்த்தும்  எண்ணம் தற்போது இல்லை என்று  போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். சென்னை,  மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட  வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்துத்துறை  அமைச்சர் ராஜ கண்ணப்பன்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  கூறுகையில்: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை  சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்றால் உப்பு திண்ணவர் தண்ணீர் குடித்து தான்  ஆகவேண்டும். தவறு செய்தால் தண்டனை நிச்சயம். பொதுமக்களின் நன்மையை கருதி, முதல்வர் ஆட்சி செய்து கொண்டு  இருக்கிறார். அதிமுகவினர் கடந்த ஆட்சி காலத்தில், மோசமான நிர்வாகத்தை  நடத்திவிட்டு நல்லவர்கள்போல் நடிக்கிறார்கள்.தமிழகத்தில்  போக்குவரத்து துறை நஷ்டத்தில் சென்றாலும், மக்கள் நலனில் அக்கறையோடு   செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில், பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு, ஜெர்மனி நாட்டில் இருந்து 2500 புதிய பேருந்துகள்  வாங்கப்படும். போக்குவரத்து துறை  நிதி சுமையில் இருந்த போதும்  பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும்  எண்ணம் தற்போது இல்லை. தேவையற்ற  செலவுகளை குறைத்து வருகிறோம். தமிழகத்தில் 40% பெண்கள் பயன்படுவர் என்ற  அடிப்படையில்  இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்  தற்பொழுது 61% பெண்களுக்கு  திட்டம் பயன்படுகிறது. இதுவரை 9.20 லட்சம்  மகளிர் பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு 30 லட்சம் மகளிர் பயணடைந்து  வருகின்றனர். இதனால் கூடுதலாக 150 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது என்றார்….

The post நிதி சுமையில் இருந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Minister ,Rajanganappan ,Dinakaran ,
× RELATED புதிய பயண அட்டை வழங்கும் வரை சீருடை...