×

ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்கள் தலிபான்களிடம் வீழ்ந்தன: அடுத்ததாக தலைநகர் காபூலுக்கு குறி

காபூல்: ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக ஆப்கான் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஆப்கானில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் தலிபான்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மேலும் 3 மாகாணங்களை தலிபான்கள் வசமாக்கி உள்ளன. வடக்கிழக்கில் இருக்கும் பதாக்சன், பாக்லான் மாகாணங்களில் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், மேற்கு பகுதியில் பாரா மாகாணமும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பால்க் மாகாணத்துக்கு விரைந்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கும் திறமைமிக்க படை தளபதிகளின் உதவியை பெறுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.  தலைநகர் காபூலுக்கு முன்கூட்டியே இதுவரை நேரடியாக அச்சுறுத்தல் வரவில்லை. எனினும், தலிபான்களின்  வேகம் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் அரசு கட்டுப்பாட்டில் காபூல் இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்….

The post ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்கள் தலிபான்களிடம் வீழ்ந்தன: அடுத்ததாக தலைநகர் காபூலுக்கு குறி appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Taliban ,Kabul ,US ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு