×

தமிழுக்கு தனி அலுவலகம் ஏன் அமைக்கவில்லை சமஸ்கிருதத்தை ஆரிய மொழி என அடையாளப்படுத்தாதது ஏன்? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

மதுரை: மதுரை, கோமதிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் மணிமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மைசூரு கல்வெட்டுத்துறையில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தொல்லியல் ஆவணங்களை சென்னை தொல்லியல் துறை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்ற கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைச்சுவாமி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘மைசூரு கல்வெட்டுத்துறையில் அதிக பணிச்சுமையால் பணியில் உள்ளவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பின்றியும், பராமரிப்பின்றியும் உள்ளதால் கல்வெட்டுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். தொல்லியல் தொடர்பான மேலும் சில மனுக்கள் மீதான விசாரணையில் ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் நம்பிராஜன், அஜய்யாதவ் ஆகியோர் வீடியோ கான்பரன்சில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், ‘‘தமிழுக்கென தனி அலுவலகத்தை ஏன் அமைக்கவில்லை. சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு ஏன் திராவிடியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தை இந்தோ – ஆரிய மொழியாக ஏன் அடையாளப்படுத்தவில்லை’’ என கேள்வி எழுப்பினர்….

The post தமிழுக்கு தனி அலுவலகம் ஏன் அமைக்கவில்லை சமஸ்கிருதத்தை ஆரிய மொழி என அடையாளப்படுத்தாதது ஏன்? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Igourd ,Madurai ,Manimaran ,Gomathipuram ,Ikord Madurai Branch ,Mysore ,Icourt branch ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!