×

பெகாசஸ் விவகாரம்; நீதி கேட்டு வருபவர்கள் முதலில் நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வையுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு வெளியே பதில் தருவதை தவிர்த்துவிட்டு அங்கேயே பதில் தருக என கூறியுள்ளது. பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு வெளியே பதில் தருவதை தவிர்த்து விட்டு அங்கேயே பதில் கூற வேண்டும் என கூறியுள்ளார். நீதிமன்றத்தில் தெரிவிப்பதை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதிக்கிறீர்கள் என்றால் அது உங்களது விருப்பம் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதி கேட்டு வருபவர்கள் முதலில் நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைக்க வேண்டும். நிதிமன்றத்தின் மீது நம்பிக்கையின்மை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகள் பகிரப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆக.16-க்கு உச்சநீதிமன்றம் ஒத்தவைத்தது.  பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக செய்தித்தாள்கள் தவிர வேறு ஆதாரங்கள் உண்டா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த வார விசாரணையில் கேள்வி எழுப்பினர். இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது….

The post பெகாசஸ் விவகாரம்; நீதி கேட்டு வருபவர்கள் முதலில் நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வையுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Pegasus ,Dinakaran ,
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து