×

மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திஷா செயலி பெண்களுக்கான பிரம்மாஸ்திரம்-திருப்பதி எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திஷா செயலி பெண்களுக்கான பிரம்மாஸ்திரம் என்று திருப்பதி எம்எல்ஏ பேசினார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக மாநில அரசால் வடிவமைக்கப்பட்ட திஷா மொபைல் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொகுதி எம்எல்ஏ கருணாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பெண்கள் பாதுகாப்பிற்கு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு பிரம்மாஸ்திரம் போன்றது. எந்த நேரத்திலும் ஆபத்து காலங்களில் மிக உதவியாக இருக்கும். எனவே, இந்த செயலியை அனைத்து பெண்களும் தங்களது செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அவசர காலத்தில் செயலி மூலமாக செல்லும் தகவல்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். உடனே சிறப்பு சேவை மையத்தினர் தொடர்பு கொண்டு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். பெண்களின் மீதான வன்கொடுமைகள் தடுக்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சங்க குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.இதில், எஸ்பி வெங்கட அப்பல நாயுடு, மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திஷா செயலி பெண்களுக்கான பிரம்மாஸ்திரம்-திருப்பதி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Disha Processor ,Brahmastram ,Tirupati MLA ,Tirupati ,Disha Saki Brahmastra ,AP ,Disha ,Brahmastram-Tirupati MLA ,
× RELATED வரும் 9ம் தேதி விஜயகாந்திற்கு...