×

தண்டராம்பட்டு அருகே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான மின்கம்பம்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவரடியார் குப்பம் ஏரிக்கரை பகுதியில் விவசாய நிலத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் மும்முனை மின்சாரம் செல்லும் மின்கம்பங்கள் அமைந்துள்ளது. இதில், மூன்று இடங்களில் மின்கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தானிப்பாடி துணை மின்நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எந்நேரத்திலும் பலத்த மழையுடன் காற்று வீசினால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்சார கம்பங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post தண்டராம்பட்டு அருகே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான மின்கம்பம்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Dandarampattu ,Devaradiyar Kuppam ,Kolamajanur panchayat ,
× RELATED கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை...