×

கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் வணிக வளாகங்களை திறக்க கேரள அரசு திடீர் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில்  ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி முதல் வணிக வளாகங்களை திறக்க, இம்மாநில அரசு  திடீரென அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான  மாநிலங்களில் கொரோனாவின்  தீவிரம் குறைந்து விட்டது. ஆனால், கேரளாவில் மட்டும் நோய்  பரவல் இன்னும்  குறையவில்லை. கடந்த 5 நாட்களில்  மட்டும் 1,08,445 பேருக்கு நோய் பரவியுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பரவல் அதிகமுள்ள இடங்கள்  தவிர, மற்ற இடங்களில் அனைத்து அத்தியாவசிய கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக சனி, ஞாயிறு நாட்களில் அமல்படுத்தப்பட்ட முழு  ஊரடங்கு, இந்த வாரம் முதல் ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே அமலில் இருக்கும்  என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி,  மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கேரளாவின் புகழ் பெற்ற ஓணம் பண்டிகை வரும் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வரும் 11ம் தேதி முதல் வணிக  வளாங்களை திறக்க அரசு திடீரென அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, காலை 7 மணி முதல் இரவு 9 மணி  வரை வணிக வளாகங்களை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே நேரம், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட  அனுமதி அளிக்கவில்லை. சுற்றுலா மையங்கள் திறப்புகேரளாவில் கொரோனா பரவல் குறையாத நிலையிலும் சுற்றுலா மையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது, நெல்லை மாவட்டத்தை ஒட்டி உள்ள தென்மலையில் உள்ள செந்துருணி, பாலருவி சூழல் சுற்றுலா மையங்களை திறக்கவும்  நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.  இங்கு நீர்வீழ்ச்சிகள், தடாகங்கள், பொழுபோக்கு மையங்கள் உள்ளன. இவை கொரோனா 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரலில் மூடப்பட்டன….

The post கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் வணிக வளாகங்களை திறக்க கேரள அரசு திடீர் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kerala Government ,Thiruvananthapuram ,Oenam festival ,Kerala ,state government ,Corona ,
× RELATED தக்கலை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் கேரள அரசு பேருந்துகள்