×

ஆடிஅமாவாசை, ஆடிப்பூரத்தையொட்டி கூட்டம் கூடும் என்பதால் கோயில்களில் இன்று, 11ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு தடை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: ஆடி அமாவாசையையொட்டி இன்றும், ஆடி பூரத்தையொட்டி வரும் 11ம் தேதியும் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும்  வகையில் நாளை முதல் அடுத்த இரண்டு  வாரங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள்  தரிசனத்துக்கு தடை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதி (இன்று) ஆடி  அமாவாசை, ஆகஸ்ட் 11 ம்தேதி ஆடிபூரத் திருவிழாவும் வர உள்ளது. இந்த  நாட்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு  கோயில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில்  ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஆடிஅமாவாசை, ஆடிப்பூரத்தையொட்டி கூட்டம் கூடும் என்பதால் கோயில்களில் இன்று, 11ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு தடை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adi ,Amavasi ,Aadipuram ,Minister ,Shekharbabu ,Chennai ,Adi Amavasi ,Aadi Puram ,Ministry of Charitable Affairs ,
× RELATED ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான...