×

இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு வீடுகள்தோறும் கலைஞருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு

* நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி* தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள்சென்னை: திமுக தலைவரும், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். கலைஞர் 50 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் தலைவராகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். மேலும் தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, எந்த தலைவர்களாலும் முறியடிக்க முடியாத வரலாற்று சாதனை படைத்தவர். அத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான கலைஞரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் திமுக சார்பில் அமைதி பேரணி மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு-அவற்றை முறையாகக் கடைபிடித்து-ஆகஸ்ட் 7 அன்று (இன்று) அவரவர் இல்லத்தின் வாசலில் கலைஞரின் படத்தினை வைத்து  மாலையிட்டு-மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்த ேவண்டும். பெரு விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள்-ஒலிபெருக்கிகளை தவிர்க்க வேண்டும். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் முத்தமிழறிஞருக்கு வீடுகள் தோறும் மரியாதை செலுத்துவோம்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இன்று கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரவர் வீடுகளில் கலைஞர் படத்தை வைத்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்….

The post இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு வீடுகள்தோறும் கலைஞருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Tamil Nadu ,Chennai ,DMK ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...