×

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார் மீதான விசாரணைக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ம் ஆண்டு வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 4ம் தேதி நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர்.   இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை 3 நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ராஜேந்திர பாலாஜி மீதான புகார் தொடர்பான ஆவணங்கள் திரடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றார். இதை ஏற்ற நீதிபதி, விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

The post முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார் மீதான விசாரணைக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : minister ,Rajendra Balaji ,CHENNAI ,KT Rajendra Balaji ,Dinakaran ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...