×

நூலிழையில் ஏமாற்றம்

மல்யுத்த போட்டியின் 87 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர்  தீபக் புனியா அரையிறுதியில் அமெரிக்க வீரர் டேவிட் மோரிசனிடம் தோற்றுப்போனார். அதனால் வெண்கலம் பதக்கத்திற்காக நேற்று, சான் மரினோ வீரர்  மைலேஸ் நசேமுடன் மோதினர். முதல் பகுதி முழுவதும் 2-1 என்ற புள்ளி கணக்கில் தீபக் முன்னிலையில் இருந்தார். அடுத்து 2வது பகுதியிலும் அதே நிலைமை நீடித்தது. ஆனால் கடைசி 10விநாடிகளில் நிலைமை மாறியது. மைலேஸ் பிடியில் சிக்கிய தீபக் விடுபடுவதற்குள் ஆட்டம் முடிந்தது. அதனால் கூடுதல் புள்ளிகள் பெற்ற மைலேஸ் 4-2 என்ற புள்ளி கணக்கில் நூலிழையில் வென்று வெண்கலத்தை வசப்படுத்தினார். இத்தாலி நாட்டை 4பக்கமும் எல்லைகளாக கொண்ட சான் மரினோ என்ற குட்டி நாட்டின் மொத்த மக்கள் தொகை 3600தான்.மகளிர் 53கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில்  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கினார். முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை சோபியாவை  7-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து காலிறுதியில் 3-9 என்ற புள்ளி கணக்கில் பெலாரஸ் வீராங்கனை வானேசாவிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் (19வயது) வெண்கல பதக்கத்துக்கான மறுவாய்ப்பு(ரிபசாஜ்) போட்டியில் களமிறங்கினார். அதில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் வாளறியாவிடம் 1-5 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார்….

The post நூலிழையில் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Deepak Punia ,David ,Dinakaran ,
× RELATED தீமைகளை நீக்கி நல்வாழ்வு அருளும் தெய்வீக தலமரங்கள்