×

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டிற்கே சென்று மருந்து வழங்கப்படும்-கலெக்டர் தகவல்

சிவகங்கை : மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.சிவகங்கை அருகே ஓ.புதூர் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: ஒட்டு மொத்த மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் துவங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொடர் நோய் உள்ளவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்து ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகள், மருந்துகள் வழங்கப்படுகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 252 துணை சுகாதார நிலையங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாமணி, ஊராட்சி மன்றத்தலைவர் அர்ச்சுணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லெட்சுமிமாரி, வட்டார மருத்துவ அலுவலர்கள் பார்த்தசாரதி, ஆரூண், செந்தில், நாகநாதன், திமுக சார்பில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டிற்கே சென்று மருந்து வழங்கப்படும்-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்