×

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்-கலெக்டர் துவக்கி வைத்தார்

காரியாபட்டி/திருச்சுழி : காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாபட்டி துணை சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது.கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் கிராமத்தில் உள்ள பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று மருந்துகளை கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து நடமாட முடியாத நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தேவையான சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணியினை பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) பழனிச்சாமி, காரியாபட்டி வட்டாட்சியர் தனக்குமார், மல்லாங்கிணறு பேரூராட்சி ஈ.ஓ அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் திருச்சுழி அருகே பனையூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் குமரேஸ்வரி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி, சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்-கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Truchuzhi ,Kariyapatti Circle ,Ayanrediyapatti ,Public Health and Preventive Medicine Department ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்