×

இந்திய அணி தோற்றதற்கு ஹாக்கி வீராங்கனையின் ‘சாதி’ காரணமா? அவதூறு செய்த சக வீரர் உட்பட 3 பேர் கைது

ஹரித்வார்: இந்திய மகளிர் ஹாக்கி அணி தோற்றதற்கு குறிப்பிட்ட வீராங்கனையின் சாதி காரணம் எனக்கூறி அவதூறு செய்த விவகாரத்தில் சக ஹாக்கி வீரர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதையறிந்த மூன்று பேர், வந்தனாவின் சொந்த ஊரான ரோஷனாபாத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு வந்து நின்று நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்துள்ளனர். இந்தச் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வந்தனாவின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அவர்களின் சாதிப் பெயரைக் கூறி அவதூறு செய்துள்ளனர். இந்திய அணி தோற்றதற்கு அதிகமான தலித் பிரிவினரைச் சேர்த்ததுதான் காரணம் எனக் கூறி அவதூறு சொற்களைக் கூறி திட்டிச் சென்றனர். இதனால், வந்தனாவின் குடும்பத்திருக்கும், அந்த மூன்று நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதுகுறித்து வந்தனாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதும் ஐசிபி 504, எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்களில், தேசிய அளவிலான ஹாக்கி வீரர் விஜய்பால், அவரது நண்பர் அங்கூர் பால் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரான சுமித் சவுகான் என்பவரை தேடி வருகின்றனர். வீராங்கனையை சாதி பெயரை கூறியும், அணி தோற்றதற்கு அவர்தான் காரணம் எனக்கூறியவர்களுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் ‘தலித் லைவ்ஸ் மேட்டர்’ என்ற ஹேஷ்டேக்கில் கடுமையான எதிர்வினை பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். …

The post இந்திய அணி தோற்றதற்கு ஹாக்கி வீராங்கனையின் ‘சாதி’ காரணமா? அவதூறு செய்த சக வீரர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Indian team ,Haridwar ,women's hockey team ,Indian ,Dinakaraan ,
× RELATED உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரையில் 3...