டெல்லி : புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஜந்தர் மந்தரில் போட்டி நாடாளுமன்ற கூட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்கள், ஜந்தர் மந்தர் சென்றனர்.உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பில் உள்ள ஜந்தர் மந்தரில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திரண்டு விவசாயிகளை ஆதரித்து குரல் எழுப்பினர்.விவசாயிகளை காப்பற்று, இந்தியாவை காப்பாற்று என்ற பதாகைகளை ஏந்தி கொண்டு அவர்கள் முழக்கம் எழுப்பினர்.விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட 14 கட்சியின் தலைவர்கள் நீண்ட நேரம் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்….
The post விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் குதித்த ராகுல் காந்தி…. விவசாயிகளை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று என பதாகைகளை ஏந்தியவாறு முழக்கம் appeared first on Dinakaran.