×

விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் டெல்லி

புதுடெல்லி: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் பிளே ஆப் போட்டியில், உத்தரகாண்ட் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற டெல்லி அணி கால் இறுதிக்கு முன்னேறியது. டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. உத்தரகாண்ட் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. தொடக்க வீரர் கமல் சிங் அதிகபட்சமாக 77 ரன் (83 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஜெய் பிஸ்டா 31, கேப்டன் குணால் சாண்டிலா 62 ரன் (83 பந்து, 6 பவுண்டரி), திக்‌ஷான்ஷு 20, வைபவ் பட் 29, சவுரவ் ராவத் 44 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் பிரதீப் சங்வான் 3, லலித் யாதவ், நிதிஷ் ராணா தலா 2, ஷிவாங்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 50 ஓவரில் 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. ராணா 81 ரன் (88 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), அனுஜ் ராவத் 95* ரன் (85 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் சங்வான் 58* ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். கால் இறுதி சுற்று இன்று தொடங்குகிறது. முதல் கால் இறுதியில் குஜராத் – ஆந்திரா அணிகளும், 2வது கால் இறுதியில் கர்நாடகா – கேரளா அணிகளும் மோதுகின்றன. நாளை நடக்கும் 3வது கால் இறுதியில் உத்தர பிரதேசம் – டெல்லி அணிகளும், 4வது கால் இறுதியில் மும்பை – சவுராஷ்டிரா அணிகளும் சந்திக்கின்றன. அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 11ம் தேதியும், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி 14ம் தேதியும் நடக்க உள்ளன….

The post விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் டெல்லி appeared first on Dinakaran.

Tags : Vijay Hazare Trophy ,Delhi ,New Delhi ,Vijay Hazare Cup ODI ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED மின்சார வாகனங்களுக்கு மானியம் இனி இருக்காது: நிதின் கட்கரி தகவல்