×

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் திடீர் சோதனை : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என பெகாசஸ் ஸ்பைவேரை தயாரித்த என்எஸ்ஓ நிறுவனம் ஆய்வு

ஜெருசலேம் : பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் சோதனை நடத்தி உள்ளது. உலகம் முழுவதும் சர்ச்சையை கிளம்பியுள்ள பிரச்னையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க உள்ளதாக என்எஸ்ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம், பல்வேறு நாட்டு அரசுகளுக்கு விற்பனை செய்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை புலனாய்வு செய்த சர்வதேச ஊடக கூட்டமைப்பு பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் சுமார் 50,000 தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறியது. இதனையடுத்து பெகாசஸ் விவகாரம் வலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பெரும் பேச்சு பொருளாக மாறியது. இதில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், தற்போது இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவ் நகரில் உள்ள என்எஸ்ஓ நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் சட்டப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கண்ட்ஸ் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘இஸ்ரேல் ஏற்றுமதி சட்டப்படி, மென்பொருளை சட்டப்பூர்வ பணிக்கு பயன்படுத்த முடியும்.குற்றம் தடுப்பு, தீவிரவாதம் போன்றவைக்கு மென்பொருளை பயன்படுத்த அனுமதிக்கிறோம்.இதில் உருவாகும் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.தற்போது எழுந்துள்ள பிரச்னையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’என்றார். பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் தலைவர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.இந்த விபரீத தொழில்நுட்பத்தை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்திற்கு அளிக்கப்படும் இன்ப்ராஸ்டரக்ச்சர் சேவைகளை அமேசான் நிறுவனம் ஏற்கனவே முடக்கியது குறிப்பிடத்தக்கது. …

The post இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் திடீர் சோதனை : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என பெகாசஸ் ஸ்பைவேரை தயாரித்த என்எஸ்ஓ நிறுவனம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Israeli Defense Ministry ,NSO ,Pegasus ,Jerusalem ,Israeli Ministry of Defense ,Dinakaran ,
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...