×

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக கோவேந்தன் பதவி ஏற்பு

சென்னை: சென்னையின் 31வது, மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக கோவேந்தன் ஐஎப்எஸ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னையின் 31வது, மண்டல பாஸ்போர்ட் அலுவலராக கோவேந்தன் ஐஎப்எஸ், நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர், 2009ம் ஆண்டு இந்திய அயல்நாட்டுப் பணியில் (ஐஎப்எஸ்) சேர்ந்தார். அவர், இதற்கு முன்பு போர்ச்சுக்கல், பூட்டான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணிப்புரிந்துள்ளார். குறிப்பாக, பிரேசிலில் அவரதுப் பணிக்காலத்தில், ஜூலை 2014 மற்றும் நவம்பர் 2019ல், `பிரிக்ஸ்’ உச்சி மாநாடுகளில் பங்கேற்க வந்த இந்தியப் பிரதமரின் வருகை, இரண்டு முறையும், அவரால் வெற்றிகரமாக கையாளப்பட்டது. மேலும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்ஸனெரோ, இந்தியாவுக்கு 2020 ஜனவரி மாதம் வருகை தந்தபோது, 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட முக்கியப் பங்காற்றியுள்ளார்.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பிரேசிலில் இருந்து 800 இந்தியர்களைப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றம் செய்து, தாயகம் திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர். அவர் தனது பள்ளிப் படிப்பைச் சென்னை அழகப்பா பள்ளியில் முடித்து, அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரியில் சுரங்கப் பொறியியலில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். இந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகளில் சரளமாக உரையாடும் திறன் பெற்றவர். தற்போது, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பதவி ஏற்றுள்ள கோவேந்தனுக்கு சக அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்….

The post சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக கோவேந்தன் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Govendan ,Chennai ,Passport Officer ,IFS ,Zonal Passport Officer ,Chennai 31st ,Zone Passport Officer ,Govantan ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...