×

அரூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்

அரூர் : அரூர் பகுதியில், மக்காச்சோளம் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தர்மபுரி  மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தீர்த்தமலை, கோட்டப்பட்டி  மொரப்பூர், கம்பைநல்லுர்,  உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரம்  ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில்  தற்போது அறுவடை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல்  கிடைத்தால், ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை முதல் 40 மூட்டை வரை கிடைக்கும்.  கோழிகள் மற்றும் கால்நடை தீவனத்திற்கும், உணவிற்கும், சத்துமாவு தயாரிப்பிலும் அதிக  அளவில் பயன்படுவதால் நல்ல விலை கிடைக்கிறது. தேவை அதிகமாக இருப்பதால், தற்போது அதிக  பரப்பில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். …

The post அரூர் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Dharmapuri District Arur ,Gopinathampatti Kootrodu ,Dinakaran ,
× RELATED அரூரில் 19ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு