×

மேடையில் சேர்ந்து போட்டோ எடுக்கும்போது மவுனி ராய் இடுப்பில் கைவைத்த முதியவர்கள்

புதுடெல்லி: பல்வேறு மொழிகளில் நடித்து வரும் மவுனி ராய், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு வருமாறு:
கர்னால் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விருந்தினர்களின் செயல்பாடு எனக்கு அதிக அருவெறுப்பை ஏற்படுத்தியது. தாத்தா வயதிலுள்ள இருவர், மேடையில் என்னுடன் போட்டோ எடுக்கும் போது, திடீரென்று எனது இடுப்பில் கைவைத்தனர். உடனே நான் கையை எடுக்கும்படி கத்தியபோது, அவர்கள் கோபத்துடன் மேடைக்கு கீழே போய் நின்று, என்னை நோக்கி ஆபாசமாக சைகை காட்டினர். என்மீது ரோஜா பூக்களை வீசி எறிந்தனர். மேடையில் இருந்து நான் கீழே இறங்கி செல்ல முயன்றபோது கூட விடவில்லை.

அங்கிருந்த குடும்பத்தினரோ, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ அந்த முதியவர்களை தடுக்கவில்லை. இது எனக்கு அதிகமான அவமானத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. என்னை போன்ற பிரபலமானவர்களுக்கே இந்த நிலை என்றால், புதிதாக வரும் பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? பிரபலமான திரைப்பட கலைஞர்களான நாங்கள், கவுரவமாக தொழில் செய்ய வருகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள், இதுபோன்ற சகித்துக்கொள்ளவே
முடியாத சில செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Mouni Roy ,New Delhi ,Mouni Rai ,Karnal ,Haryana ,
× RELATED எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும்: ராசி கன்னா