×

கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிறப்பு முகாம்: கலெக்டர் மனைவி தடுப்பூசி செலுத்தி கொண்டார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி, நகர்புற அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், கலெக்டரின் மனைவி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகம் நேற்று  நடந்தது. இதில் கலெக்டரின் மனைவி டாக்டர் ரேஷ்மா ராகுல்நாத் கலந்து கொண்டு,  கொேரானா  தடுப்பூசி செலுத்தி கொண்டார். பின்னர், கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து காப்பிணிகள் மற்றும் பாலுட்டும். தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிறப்பு மருத்துவ தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், காப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மர்களுக்கான சிறப்பு தனிவரிசை அமைக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை, கர்ப்பிணிகள் 4048 பேர், பாலூட்டும் தாய்மார்கள் 2228 பேருக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. கிராமங்களில் வசிக்கும் காப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூரிகள் செலுத்த  மண்டல  வாரியாக குழுக்கள் அமைத்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில்மாவட்ட சுகாதாரத்துறை  துணை இயக்குநர்  பிரியாராஜ். செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிறப்பு முகாம்: கலெக்டர் மனைவி தடுப்பூசி செலுத்தி கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Corona ,special camp ,Chengalpattu ,Urban ,Government Aramba Health Center ,Chengalpattu Municipality Anumanthaputheri ,Corona special camp ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...