×

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு கால நீட்டிப்பு கூடாது சொந்த மக்களையே உளவு பார்க்கும் ஒன்றிய அரசு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் லாசர் தலைமையில், 3 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஜூலை 31 வரையிலும் வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை மேலும் காலநீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை, 300க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் நீண்ட நாட்களாக ரகசியமாக கண்காணிக்கப்படுவதாகவும், உரையாடல்கள் உட்பட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவதாகவும் அண்மையில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்று.  இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரணை நடத்திட வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது….

The post ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு கால நீட்டிப்பு கூடாது சொந்த மக்களையே உளவு பார்க்கும் ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union government ,Chennai ,Marxist Communist Party ,Lazar ,
× RELATED இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்