×

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, ஜூன் 4: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலஸ்தீன காபா அகதி முகாமின் மீது இஸ்ரேல் குண்டு வீசி கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்(பொ) கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, சேதுராமன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், சாந்தி, அழகர்சாமி, தாலுகா செயலாளர்கள் அழகர்சாமி, காந்திமதி, ராஜீ மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Sivagangai ,Sivagangai Palace ,Marxist Communist Party ,Kaaba ,executive ,Muthuramalingaboopathi ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...