×

ஜேம்ஸ்பாண்ட் பட லொகேஷனில் பிரபாஸ்

ஐதராபாத்: யஷ் நடிப்பில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கி வரும் பான் இந்தியா படம், ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் பிருத்விராஜ், ஜெகபதி பாபு நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், வரும் செப்டம்பர் 28ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழி களில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்று, இத்தாலி நாட்டிலுள்ள மிகப்பழமையான நகரான மாடேராவில் படமாக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜேம்ஸ்பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’க்கான சில சண்டைக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது.

Tags : Prabhas ,James Bond ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...