×

நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்பிக்களுடன் ராகுல் போராட்டம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று தங்களின் போராட்டத்தை தொடங்கினர். நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சி எம்பி.க்களுடன் போராட்டம் நடத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடந்த இந்த போராட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்றனர். இதில், புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது….

The post நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்பிக்களுடன் ராகுல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Raqul ,New Delhi ,Delhi ,Jandar Mantar ,Union Government ,Campus ,Kong ,Raqull ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...