×

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை: பொது நலன் மனு தாக்கல்

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மென்பொருள் மூலமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2 ஒன்றிய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் ஆணையர் என 300க்கும் மேற்பட்டவர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவர்களின் போன்களில் இருந்து தகவல் திருடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘பெகாசஸ் ஒரு கண்காணிப்பு கருவி மட்டுமல்ல. இது இந்திய அரசியலில் கட்டவிழ்த்து விடப்படும் சைபர் ஆயுதம். இது, இந்திய ஜனநாயகம், நீதித்துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு மீதான கடுமையான தாக்குதல். பெகாசஸின் பயன்பாடு உரையாடல்களைக் கேட்பது மட்டுமல்ல, ஒருவரின் வாழ்க்கையின் முழு தகவல்களும் டிஜிட்டல் மூலம் ஹேக் செய்ய முடியும். உலகளாவிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், மனித உரிமைகள் மீறும் பிரச்னையாகவும் இது உள்ளது. எனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது….

The post பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை: பொது நலன் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Pegasus ,Supreme Court ,New Delhi ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...