×

தமிழகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படும் ஆடி வெள்ளி!: அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வழிபாடு..!!

தஞ்சாவூர்: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வழிபாட்டு சென்றனர். கும்பகோணம் அருகில் உள்ள பட்டீசுவரம் துர்க்கையம்மன் ஆலயம் என அழைக்கப்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கோயில்களில் அர்ச்சனைகள் செய்யப்படவில்லை. அம்மனின் அருளை பெற ஏராளமானோர் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு காலை முதலே கோயிலில் கூடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். கோயிலின் கிழக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதை கோயில் நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தினர். விழுப்புரத்தில் புகழ்ப்பெற்ற வீரவாழி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வழிபாட்டு சென்றனர். ஆடி வெள்ளியுடன் இன்று பௌர்ணமியும் சேர்த்து வருவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் காலை முதலே கூடிய ஏராளமான பெண்கள் அம்மனை வணங்கி சென்றனர். ஆடி வெள்ளியுடன் கூடிய பௌர்ணமி தினமான இன்று குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டியும், கர்ப்பிணி பெண்கள் வளையல் மாற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். …

The post தமிழகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படும் ஆடி வெள்ளி!: அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Aadi Villi ,Tamil Nadu ,Amman ,Thanjavur ,Aadi ,Tamilnadu ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...