×

மாதவிடாய் நேரத்தில் படப்பிடிப்பில் உடை மாற்றக்கூட என்னை அனுமதிக்கவில்லை: பார்வதி திடீர் குற்றச்சாட்டு

சென்னை: மலை​யாள நடிகை​ பார்​வ​தி திருவோத்து, தமிழில் வெளி​யான ‘பூ’, ‘மரியான்’, உத்​தம வில்லன்’, ‘தங்​கலான்’ உள்பட சில தமிழ் படங்களில் நடித்​துள்​ளார். சமீபத்​தில் அவர் அளித்​த பேட்டியில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில மோசமான அனுபவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘மரி​யான்’ என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில் நடந்த ஒரு வருத்தமான சம்பவம் குறித்து குற்றம் சாட்டியிருக்கிறார். அது வருமாறு:

‘மரி​யான்’ படத்தின் ஒரு காட்​சி​யில் நான் தண்​ணீரில் நனைந்​த​படி நடித்​தேன். அது ஹீரோ தனுஷுடன் தோன்றும் ஒரு காதல் காட்​சி. அப்​போது மாற்று​வதற்கு நான் எந்த டிரெஸ்சும் கொண்டு வரவில்​லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எனது தேவை​களை கவனித்துக்கொள்ள யாரும் இல்​லை. ஒருகட்டத்தில், உடை மாற்​று​வதற்​காக நான் எனது ஓட்​டல் அறைக்கு சென்று வரவேண்​டும் என்று சொன்னேன்.

அதற்கு அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை. எனக்கு ‘பீரியட்’ என்​றும், நான் கண்​டிப்​பாக சென்று வரவேண்​டும் என்றும் பலத்த குரலில் சொன்​னேன். படப்பிடிப்​பில் என்னையும் சேர்த்து 3 பெண்​கள் மட்டுமே பணியாற்றினோம். அது எனக்கு மிகவும் கடின​மாக இருந்தது. எனக்​கு ஆதர​வாக அங்கு யாரு​மே இல்லை.

Tags : Parvathy ,Chennai ,Parvathy Thiruvothu ,
× RELATED தமன்னா நடிக்கும்‘ஓ ரோமியோ’