×

கவனத்தை ஈர்க்கும் ஆஷிகா ரங்கநாத்

தெலுங்கு படவுலகில் தனக்கென்று ஒரு வலுவான இடத்தை உருவாக்கி வருபவர், ஆஷிகா ரங்கநாத். கன்னடத்தில் கடந்த சில வருடங்களாக ஹீரோயினாகவும், சின்னச்சின்ன வேடங்களிலும் நடித்து வந்த அவர், தமிழில் ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தில் அதர்வா முரளி ஜோடியாக நடித்தார். பிறகு தெலுங்கில் அறிமுகமாகி ‘நா சாமி ரங்கா’, ‘அவதார புருஷா 2’, ‘ஓ 2’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு சித்தார்த் ஜோடியாக ‘மிஸ் யூ’ என்ற தமிழ் படத்தில் நடித்த அவர், தற்போது கார்த்தியுடன் ‘சர்தார் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ரவிதேஜா ஜோடியாக ‘பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 13ம் தேதி சங்கராந்தி பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வரும் இப்படத்தில் இருந்து வெளியான ‘வாம்மோ வாயோ’ என்ற பாடல் யூடியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் ரசிகர்களின் கவனத்தை ஆஷிகா ரங்கநாத் தன் பக்கமாக ஈர்த்துள்ளார்.

Tags : Ashika Ranganath ,Kannada ,Adarva Murali ,Siddharth ,Karti ,
× RELATED டாக்ஸிக் வீடியோவில் சர்ச்சைக்குரிய...